37.அன்றின் னாதன செய்சிசு பாலனும்
பாடல் :37அன்றின் னாதன செய்சிசு பாலனும்
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே
விளக்கம் :
அன்று இன்னாதன செய்த சிசுபாலனும் - அன்று செய்யத் தகாத செயல்களைச் செய்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் - மருத மர வடிவில் வழிமறித்து நின்ற நளகுபாரன் மாணிக்ரீவனும் எருது வடிவில் நின்ற அரிஷ்டாசுரனும் கொக்கு வடிவ பகாசுரனும்
வென்றி வேல் கஞ்சனும் வீழ - கண்ணனின் , வெற்றி தரும் வேலால் கஞ்சனும் வீழ
முன் கொன்றவன் - இவர்கள் யாவரையும் முற்காலத்தில் கொன்றவன்
வரில் கூடிடு கூடலே ! - வருவார் எனில் நீ கூடிடு கூடலே!
மாபெரும் அவையில் கிருஷ்ணரை சாதிப் பெயர் சொல்லித் திட்டியவன் சிசுபாலன்.. தன்னை இகழ்ந்த சிசுபாலனை நூறு பிழைகள் பொறுத்துப் பின் வதம் செய்தார் கிருஷ்ணர் .
அடுத்தது கொக்கு வடிவில் வந்த பகாசுரன்..(புள்ளின் வாய் கீண்டானை என்று திருப்பாவையில் சொல்லுவாள் )
வெற்றி வேலால் கஞ்சனையும் வீழ வைத்தவன் இந்த கண்ணன். இவர்கள் அனைவரையும் முற்காலத்திலே கொன்றவன், என்னைக் கூட வருவார் எனில் கூடிடு கூடலே எனக் குறி கேட்கிறாள் கோதை
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!