2. வெள்ளை நுண் மணற்கொண்டு...
பாடல் :2
வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே.
விளக்கம் :
வெள்ளை நுண் மணல் கொண்டு - வெள்ளை நிறக் கோலப்பொடி கொண்டு
வெள்வரைப் பதன் முன்னம் - வெள்ளென வெளிச்சம் வருவதற்கு முன்பே
துறைபடிந்து - குளத்தில் இருக்கும் படித்துறை சென்று
முள்ளுமில்லாச் சுள்ளி எரிமடுத்து -- முட்களற்ற மரக் குச்சிகள் எடுத்து
முயன்று உன்னை - முயன்று உன்னை
நோற்கின்றேன் காம தேவா - நோன்பு இருக்கிறேன் காமதேவா
கள் அவிழ் - தேன் வடியும்
பூங்கணை - பூக்களால் செய்யப்பட்ட அம்பு தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி - கடலின் நிறம் கொண்ட நீல வண்ணன் பெயரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் -பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு (புள் ) வடிவம் எடுத்து வந்தபோது அவ்வரக்கன் வாய் பிளந்தவன் மீது
இலக்கினிற் புகவென்னை - இலக்கு வைத்து என்னை அவன் மேல்
யெய்கிற்றியே. - எய்து விடேன்
Add caption |
நன்றி :கூகுல்
அதைத் தான் தெருவணிந்து என்கிறார் முதலிரண்டு பாடல்களிலும்.. தெருவுக்கு அழகான கோலத்தை அணிவித்தல்..வெளிச்சம் வரும் முன்னம் வெள்ளெனக் குளிச்சு அதுவும் எங்க..? அக்காலத்தில் குளத்தில் குளிப்பது வழக்கம்..குளத்தின் படிகளை படித்துறை என்பது வழக்கம்..அங்கே சென்று குளிச்சுட்டு , முட்களற்ற சுள்ளி ... இன்னமும் சுள்ளி பொறுக்குதல் கிராமத்தில் வழக்கில் உள்ள பேச்சு..அப்படியான சுள்ளிகள் (மரத்தில் இருந்து விழுந்து இருக்கும் சின்னச் சின்ன உடைந்த குச்சிகள் எடுத்து எரிச்சு தீ வளர்த்து வேள்வி செய்து, காமதேவா உன்னை நோற்கின்றேன்..(நோன்பு இருத்தல் ) வேள்விகள் எப்பெண்ணாவது செய்வாளா..ஆனால் கோதை செய்கிறாள்..கண்ணனைச் சேர எதையும் செய்யத் துணிகிறாள்.. )
தேன் வடியும் பூக்களால் செய்யப்பட்ட கணைகள் கொண்டு ,தொடுத்து ,அதில் கடல் வண்ணம் கொண்ட நீல வண்ணனின் பெயர் எழுதி ,
கொக்கு வடிவில் வந்த அரக்கனின் வாய் பிளந்தவன் மார்பினை, இலக்காகக் கொண்டு அடையுமாறு அதிலே என்னையும் வைத்து எய்து விடேன்..
எப்ப்ப்ப்பூடி ...ஆண்டாள் ஆசைப்பட்ட மாதிரி பேர் எழுதியாச்சு :))
இதை படிக்கும் போதே ஒரு சன்னமான குரல் கொண்டு படிச்சுப் பாருங்களேன்..
காதல் ஓவியம் என்ற திரைப்பாட்டில் ,
"தாங்குமோ என் தேகமே..
மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே..வரிகள் நினைவுக்கு வந்தது..காமன் அம்புகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதால்தான் கோதை காமனிடம் முறையிடுகிறாள் :)
உங்கள் பதிவுகளைப் படிக்கத் துவங்கியிருக்கிறேன். மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி :) தொடர்ந்து வாசியுங்கள்..ஆண்டாளின் காதல், கோதைத் தமிழ் அனைவரிடமும் சென்று சேர்வதே எனது விருப்பம் :)
Delete