16.முற்றிலாத பிள்ளைகளோம்
பாடல் :16
முற்றிலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீசிறி
துண்டு திண்ணென நாமது
கற்றிலோம், கடலையடைத்தரக்
கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய
வேகா! எம்மை வாதியேல்.
விளக்கம் :
முற்று இலாத பிள்ளைகளோம்- முதிர்ச்சி பெறாத இளம் பிள்ளைகள் நாங்கள்
முலை போந்திலாதோமை நாள்தோறும் - முலை கூட சரியாக வளராத எங்களை நாள்தோறும்
சிறிய இல் மேல் இட்டுக்கொண்டு - நாங்கள் கட்டும் சின்ன வீட்டு மேல் ஏறிக் கொண்டு
நீ சிறிது உண்டு - நீ செய்யும் செயல்கள் சில உண்டு
திண்ணென நாம் அது கற்றிலோம் - அதை முறிக்கும் வல்லமை நாங்கள் கற்க வில்லை
கடலை அடைத்த அரக்கர் குலங்களை முற்றவும் - கடலை அடைத்து (அணை கட்டி ) அரக்கர் குலங்களை முழுமையா அழிக்கவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா ! - பகையை இலங்கைக்கே சென்று சண்டையிட்டு வென்ற வீரமுடையவனே செயலில் வேகம் கொண்டவனே
எம்மை வாதியேல் - எங்களைத் துன்புறுத்தாதே
முற்றிலாத..முற்றுப் பெறாத (முடிவடையாத ) என்றொரு பொருள் உண்டு..ஆனால் அது இங்கு பொருந்தாது.. முற்றிலாத - முற்றாத..பேச்சு வழக்கில் முத்தாத.. முதிராத, முதிர்ச்சி அடையாத முலைகள் கூட சரியாக வளராத இளம் பிள்ளைகள் நாங்கள்..
ஓவியம் கேஷவ் |
நன்றி கூகிள் |
கடலை அடைச்சு ..தண்ணி இங்கிட்டு அங்கிட்டுப் போக விடாம அணை கட்டி , அரக்கர் குலங்களை முற்றாக (முழுமையாக ) அழிக்கவும் , இலங்கையில் சண்டையிட்டு பகையை வென்ற வேகா (வீரம் ,செயல் வேகம் உடையவனே ) எங்களைத் துன்புறுத்தாதே !
நன்றி :கூகுல் |
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!