18. வட்டவாய்ச்சிறு தூதையோடு
பாடல் :18வட்டவாய்ச்சிறு தூதையோடு
சிறுசுளகும்மண லுங்கொண்டு
இட்டமாவிளையாடுவோங்களைச்
சிற்றிலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்
சக்கரம் கையிலேந்தினாய்
கட்டியுங்கைத் தாலின்னாமை
அறிதியேகடல்கண்ணனே.
விளக்கம் :
வட்ட வாய்ச் சிறு தூதையோடு - வட்ட வடிவ வாய் கொண்ட சிறு பொம்மைப்பானையோடு
சிறு சுளகும் மணலும் கொண்டு - சிறிய சுளகும் (நாம் வீட்டில் பயன்படுத்தும் சுளகு ) மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோம் எங்களை - இதெல்லாம் வச்சு விளையாடுற எங்களோட
சிற்றில் ஈடழித்து என் பயன் - சின்ன வீட்டை அழிச்சு உனக்கு என்ன பயன் ?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் - இப்படி அதைத் தொட்டு ,உதைத்து சேதம் செய்கிறாயே
சுடர்ச் சக்கரம் கையிலேந்தினாய் - ஒளிர்கின்ற சக்கரம் கையில் ஏந்தியவனே
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல் கண்ணனே - கருப்பட்டி கூட கசந்துட்டா இனிக்காது என்றறியாதவனா நீ கடல் வண்ணன் கொண்ட கண்ணனே !
கைத்தல் - கசந்து போதல்
இந்தப் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது..என்ன அழகான காட்சிப்படுத்துதல்..இது போன்ற விளையாட்டுகளை எல்லாம் நம் குழந்தைகள் இழந்துவிட்டு டிவிகளில் முடங்கிப் போவது நம் சாபக்கேடு .
மண் பானை |
சுளகு |
நன்றி கூகுல் |
வட்ட வடிவான பானை ,சுளகுல புடைச்ச மணல் கொண்டு விளையாடிட்டு இருக்கும் எங்களை ,நாங்கள் செய்யும் இந்தச் சிறு வீட்டை ,நீ அழிச்சு உனக்கு என்ன ஆகப்போகிறது ? இப்படி அதைத் தொட்டு உதைத்து சேதப்படுத்திவிடுகிறாயே ?
ஒளிர்கின்ற சக்கரம் கையில் ஏந்தியவனே ! கடல் வண்ண கண்ணனே!
இனிக்கின்ற கருப்பட்டி கூட கைத்தல் ஆகிட்டா (கைத்தல் -கசந்து போதல், , கார்ப்பு ) இனிக்காது .போலவே என்னதான் நீ மனத்திற்கு இனியவனாக இருந்தாலும் , இப்படி எங்கள் சிறிய வீட்டை நீ இடித்தால் எங்க மனசும் கசந்து போயிடும்..நொந்து போயிடும்..இதைக் கூட அறியாதவனா நீ ?
உனக்காகவே உருகிக்கொண்டு இருப்பவளைக் கண்டு இரக்கமுறு இல்லாவிடில் நீ எவ்வளவு இனிமையானவன் எனினும் என் மனம் உன் மீது வருத்தம் கொள்ளும் என்கிறாள் ஆண்டாள் :)
உனக்காகவே உருகிக்கொண்டு இருப்பவளைக் கண்டு இரக்கமுறு இல்லாவிடில் நீ எவ்வளவு இனிமையானவன் எனினும் என் மனம் உன் மீது வருத்தம் கொள்ளும் என்கிறாள் ஆண்டாள் :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!