7. காயுடை நெல்லொடு கரும்பமைத்து
பாடல் :7
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
விளக்கம் : காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து - பச்சை நெல்லோடு கரும்பமைத்து
கட்டி அரிசி அவல் அமைத்து - அதைக் கட்டி, சுற்றி அரிசிஅவலும் வைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் - வேதம் ஓதுபவர்கள் சொல்லும் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்- மன்மதனே உன்னை வணங்குகிறேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் - உலகளந்த திரிவிக்கிரமன்
திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம் -திருக் கைகளால் என்னைத் தொடும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும் -சாய்ந்த என் வயிறும் பருத்த முலைகளும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே - கண்ணனால் தொடப்பட்டவை என்று இந்த உலகத்திலே புகழ்பெற எனக்கு அருள் செய்துவிடு
மன்மதா !
பால்பிடிக்கும் பச்சை நெல்லோடு கரும்பமைத்து ,
அத்தோடு அரிசிஅவலும்வைத்து ,
நன்கு வேதம் ஓதுபவர்கள் சொல்லும் அதே மந்திரங்களால் நானும் ஓதி உன்னை வணங்குகிறேன்.. மூவுலகத்திற்கும் அதிபதியான உலகளந்த உத்தமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் ,
சாய்ந்த என் வயிறும் ,என் பெரு மார்பும் ,கண்ணனால் தொடப்பட்டவை என்று இந்த உலகத்திலே பெரும்புகழ் அடைய அருள் செய்..
ஆண்டாள்தான் எவ்வளவு விதமான பூஜைகள் செய்யறாங்க..எல்லாம் அந்த ஒருவனுக்காக..மாய கண்ணனுக்காக..மனத்திற்கினியான் (sweet heart ) என்று திருப்பாவையில் அழைத்த அந்த ஆருயிர் வேந்தனுக்காக..தன் உடலும் உள்ளமும் அவன் ஒருவனுக்கே சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த காதல் அவங்களுடையது..உலகளந்த உத்தமனே தன் உடலையும் அவனே அளக்க வேண்டும் என்கிறாள் ...
ஏட்டி கள்ளச்சி.. :)
சிவப்புஅரிசிஅவல் |
நன்கு வேதம் ஓதுபவர்கள் சொல்லும் அதே மந்திரங்களால் நானும் ஓதி உன்னை வணங்குகிறேன்.. மூவுலகத்திற்கும் அதிபதியான உலகளந்த உத்தமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் ,
ஓங்கிஉலகளந்த உத்தமன் |
ஏட்டி கள்ளச்சி.. :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!