கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று
பாடல் :39கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே
விளக்கம் :
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று - சிறியவனாக குள்ளனாக உருவெடுத்து
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்- பண்டைய காலத்தில் மாவலியின் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன் - இந்த அண்டம் முழுவதும் ,நிலத்தையும் ஒன்றச் செய்து தனதாக்கிக் கொண்டவன்
வரில் கூடிடு கூடலே ! - வருவார் எனில் கூடிடு கூடலே !
உயரத்தில் சிறியவனாக குள்ளனாக உருவெடுத்துச் சென்று ,பண்டைய (முந்தைய ) காலத்தில் மாவலி என்ற மன்னனின் பெரு வேள்வியில் , இந்த அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் (எண் ஒன்று அல்ல இரண்டையும் ஒன்றச் செய்தல் ) ஒன்றச் செய்து தனதாக்கிக் கொண்டவன் என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே !
மாவலியின் அகங்காரத்தை அடக்கிய உலகளந்த பெருமாள் என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே எனக் குறி கேட்கிறாள் கோதை.எம்பெருமான் ஓங்கி மிதிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்கிறாள் கோதை :)

Add caption |

No comments:
Post a Comment
மறுமொழி இடுக!