Friday 28 October 2016

91.காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்

91.காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்
பாடல் :91
காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே

விளக்கம் :
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்  - காலை எழுந்திருந்து கரிச்சான் குஞ்சுக் குருவிக் கூட்டங்கள்
மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் மெய்ம்மை கொலோ - திருமால் வருவார் எனச் சொல்லி மயங்கிப் பாடுவது உண்மையாகவே நடந்து விடுமா ?
சோலை மலைப்பெருமான் துவராபதி எம் பெருமான் - திருமாலிருஞ்சோலை அழகர் மழைப் பெருமான் ,துவாரகை எம் பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே - ஆல் இலையில் துயில் கொள்ளும் பெருமான்  அவன் வார்த்தை உரைக்கின்றதே!

பூ கூட அவன் நிறத்தை நினைவூட்டுவதாகச் சொன்னவளுக்கு,  கரிய குருவிகள் சத்தங்கள் மட்டும் வெறும் குருவிச் சத்தமாக் கேட்டுடுமாக்கும்..
இந்தக் கரிச்சான் குஞ்சுக் குருவிக் கூட்டங்கள் எல்லாம் திருமால் வருவார் ன்னு சொல்லி மயங்கிப் பாடுகின்றனவே..இதெல்லாம் உண்மையாகவே நடந்துடுமா..? (இதற்கு முன்பும் தான் பாடின..அப்பவும் தான் நம்பினேன்..அப்ப மட்டும் உண்மையா நடந்துடுச்சா என்ன ? ) திருமாலிருஞ்சோலை மலைப் பெருமான் , துவராகையின் பெருமான், ஆல் இலையில் கண் வளரும் பெருமான் , அவன் வருவான் என்ற ,  அவனுடைய செய்தியை எனக்குச் சொல்கின்றனவே..
Image result for arts of ilayaraja
ஓவியம் இளையராஜா 

காத்திருத்தலின் பித்து நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைகிறாள் கோதை .
அவன் வருவதைப் பாடுகிறது என்கிறாள்..அது நடந்துடுமா என்கிறாள்..பின்னர் நடக்கும் அவை தான் வருவார் என்ற வார்த்தை உரைக்கின்றதே என தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள்..
இத்தோட நம் வேதனை தீர்ந்துடும் என நம்புவதும் நடக்காவிடில் இதுவே இறுதி அல்ல எனத் தேறிக் கொள்வதும் ..

வேற வழி.. ?



90.இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்

90.இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்

பாடல் :90
இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே

பாடல் : 90
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் - இன்று வந்து இத்தனையையும் சாப்பிட்டு விட்டால்
நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வேன் - நான் ஒன்றுக்கு நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும்  அவனை ஆட்செய்வேன்
தென்றல் மணம் கமழும் திருமால் இருஞ்சோலை தன்னுள் - தென்றல் மணம் கமழும் திருமால் இருஞ்சோலைதன்னிலே
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே - நின்ற பிரான் அடியவளாகிய எனது மனத்திலே வந்து நின்றால் இன்னும் நிறையச் செய்வேன்

மணம் கமழும் தென்றல் வீசும் திருமாலிருஞ்சோலைதனிலே நின்ற பிரான் ,  இன்று வந்து ,அடியவளாகிய எனது மனத்திலேயே வந்து நின்று ,இங்கே   எழுந்தருளி  , இத்தனை (முதல் பாட்டில் நேர்த்திக் கடனாக வைத்த நெய் நிறைந்த அக்கார வடிசிலை ) சாப்பிட்டார் எனில் அவருக்கு ஒன்றுக்கு நூறாயிரமாகக் கொடுத்துப் பின் அவன் உண்ண என்னையும் கொடுப்பேன் என்னையே அவனுடையவளாக்குவேன்
ஓவியம் - இளையராஜா 

எவ்வளவு ஆசை கணவனுக்குச் சமைத்துப் போட ..அதை அவன் உண்டு பார்க்க வேண்டும் கண் நிறைய மனசு நிறைய என்று :) நூறு தடாவுல வெண்ணெய் நூறு தடாவுல (பானையில் ) அக்கார வடிசில் வந்து அவர் சாப்பிட்டாருன்னா இதையே நூறாயிரமா செஞ்சு (அடேங்கப்பா.. ஆயுசு முழுக்கச் சமைச்சுப் போட வாய்ப்புக் கேட்குதுப்பா இந்தப் பொண்ணு ) கொடுப்பேன்..அந்த திருமாலிருஞ்சோலை நம்பி என் மனசுல வந்து அப்படியே தங்கிட்டா போதும்..அவருக்கு என்னையும் உண்ணக் கொடுத்து அவனுக்கே ஆளாவேன்..அவனுடையவள் ஆவேன் :) யார் யார் என்ன என்ன வேண்டுதல் வச்சா இவ எப்படி வைக்கிறா பாருங்க.. :)

அது என்ன மணம் கமழும் தென்றல்.. ?  சோலைகளில் உள்ள பூக்களின் வாசத்தோடு ,   அவள் விருப்பம் கொண்ட மணாளனின் வியர்வை மணத்தையும்  தாங்கி வந்ததாலேயே தென்றல் மணம் வீசியது :)

Monday 24 October 2016

89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு

89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு
பாடல் :89
நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ

விளக்கம் :
நாறு நறும் பொழில் மால் இருஞ்சோலை நம்பிக்கு - நல்ல மணம் வீசும் சோலை கொண்ட திருமால் இருக்கும் சோலை நம்பிக்கு
நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் - நான் நூறு  பானையில்  வெண்ணெய்  என் வாயால்  நேர்ந்து கொண்டு  நேர்த்திக் கடனாக  வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் - நூறு பானை முழுவதும் நிறைய அக்கார வடிசில் (சர்க்கரைப்பொங்கல் போன்ற இனிப்பு ) சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ ? - குறையாத செல்வங்களைக் கொண்டவன் இன்று வந்து இவற்றை ஏற்றுக் கொள்வாரோ ?


நல்ல மணம் வீசும் சோலையில் வாழும் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு , நான் நூறு சிறிய பானையில்  வெண்ணெயை உருக்கி அதில் நெய் செய்து  நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி வழிப்பட்டேன் நூறு பானை நிறைய அக்கார வடிசிலும் சொன்னேன் ..குறையாத செல்வங்களை உடையவன் இன்று வந்து வந்து இவற்றை ஏற்றுக் கொள்வாரோ ?
நிறைய வெண்ணையை உருக்கி நெய் செய்து அக்கார வடிசில் செய்யணுமாம்   அதை அழகர் உண்னனுமாம்  ..தங்கம் வெள்ளியை விடக் குறையாத மெய் அன்பே செல்வம் என்கிறாள்.  அந்தச் செல்வம் ஏறிக் கொண்டே தானே செல்லும் .அதுதான் குறையாத செல்வம் உடையவன் என்கிறாள்..எதாவது வேண்டுதல் நிறைவேற இப்படி நேர்த்திக்கடன் வேண்டிக் கொள்வது நம் வழக்கம் அதைத்தான் ஆண்டாளும் செய்கிறாள் அப்படி எதற்காக இந்த வேண்டுதல் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன ?:)
அக்காரவடிசல் 

மிக முக்கியமான பாடல் இது.. இராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணன் ஆன நிகழ்வு :) ஆண்டாளின் உணர்வுகளைப் புரிந்து அவளின் நேர்த்திக் கடனை , , கடனாகவே  இருந்து விடக் கூடாது என்று கருதி, அதை நிறைவேற்றி வைத்தவர் இராமானுசர் :) ஓர் தமையனைப் போல ஆண்டாள் வேண்டியதை நிறைவேற்றிய  இதன் காரணமாகவே  "பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே " என்று பெயர் பெற்றாள் ஆண்டாள்..மற்றபடி ஆண்டாளுக்கு இரண்டு நூற்றாண்டு பிந்தியவர் இராமானுசர் ( பாடல்:  திருவாடிப் பூரத்து சகத்துதித்தாள் வாழியே )
ஆண்டாளைப் புரிய முலைகள் உடையவனாக இருக்க வேண்டும் என்றவர்..அதாவது சற்றேனும் பெண் தன்மை இருந்தால் தான்  அவள் பெண்மையும் பேதைமையும் புரியும் என்றார் .இதுதான் இதற்கு விளக்கம் என்று எதுவும் எழுதி விடாமல் அவள் மனம் போலே மக்கள் புரிந்து கொள்ளட்டும் அந்த அந்த காலகட்டத்தில் என விட்டுவிட்டார்..என்ன ஒரு அன்பு !என்ன ஒரு வாஞ்சை..!
எட்டாம் நூற்றாண்டு ஆண்டாளுக்காக , பத்தாம் நூற்றாண்டு பிறந்து 11-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த மகான் (கிபி 1017-1137) அதை நிறைவேற்றி இருக்கிறார்..

Image result

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் செய்த நேர்த்திக்கடன் காரணமாகவே அவர் ,வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்த பொழுது அண்ணா என்ற அழைப்பு வந்ததாம்.. அதை அறிந்த பொழுதே மேனி சிலிர்க்கின்றது .. உறுதியாக ஆண்டாள் அவரை ஆசிர்வதித்து , அவரின் அன்புக்குக் கட்டுப்பட்டிருப்பாள் நெகிழ்ந்து இருப்பாள் என்று மனதார நம்புகிறேன்!

இதுமட்டுமின்றி , ஆண்டாளின் மாலை முதன் முதலில் திருவரங்கம் செல்லக் காரணமானவரும் இவரே. திருப்பதி வரை இன்றும் ஆண்டாள் மாலை வில்லிபுத்தூரில் இருந்து செல்லக் காரணமும் இவரே. திருப்பதியில் திருப்பாவை ஒலிக்கக் காரணமும் இவரே..
ஒருவேளை இவர் இல்லாவிடில் ஆண்டாளை நாம் அறியாமலே கூட போயிருப்போமோ என்ற எண்ணம் கூட எனக்குண்டு..
உடையவர் பெருமானே ! நீர் வாழி !  இன்னுமோர் நூற்றாண்டிரும்..!

Saturday 22 October 2016

88.துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற

88.துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற

பாடல் :88
துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே

விளக்கம் :

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற  - துங்க  மலர்ச் சோலை சூழ்ந்த திருமாலிருஞ்சோலையில் நின்ற
செங்கட் கருமுகிலின் திரு உருப் போல் மலர் மேல் - செம்மையான கண்களும் மழை பொழியும் மேகத்தின் கருமை நிறம் கொண்ட கண்ணனின் திரு உருவத்தைப் போல மலர் மேல்
தொங்கிய வண்டினங் காள் தொகு பூஞ்சுனைகாள் - தொங்கிய வண்டினங்களே , அங்கு மொத்தமாய்க் கூடி இருக்கும் பூஞ்சுனைகளே !,
சுனையில் தங்கு செந்தாமரை காள் எனக்கோர் சரண் சாற்றுமினே - பூஞ்சுனையில் வாழும் செந்தாமரைகளே !அவன் நிறம் கொண்டு அவன் திருவுருவத்தை நினைவூட்டி விட்டீர்கள்..நான் அடைக்கலம் புக வழி சொல்லுங்கள்


துங்க மலர் - கொன்றை மலர் ..கொன்றை மலர்ச் சோலை சூழ்ந்த திருமாலிருஞ்சோலை நின்ற , செம்மையான கண்களும்  (செந்தாமரைக் கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம் )  , மழை பொழியும் மேகத்தின் கருமை நிறம் கொண்ட கண்ணனின் திரு உருவத்தைப் போல உள்ள ,  மலர் மேல்

Image result
கொன்றை மலர் 
தொங்கிய வண்டினங்களே !
Related image
அங்கு மொத்தமாய்க் கூடி இருக்கும் பூஞ்சுனைகளே ! பூஞ்சுனையில் பூத்துள்ள செந்தாமரைகளே !
Image result for lotus

நீங்கள் யாவரும் அவன் நிறம் கொண்டு அவன் நினைவூட்டி விட்டீர்கள் .நான்  அடைக்கலம் புக , எனக்கே எனக்கென்று ஓர் சரண் என்னவென்று சொல்லிவிடுங்கள் !
இதற்கு முன்பு வரை கண்ணனை மழை முகில் போன்ற வண்ணன், செந்தாமரை முகத்தான் என்றே தான் உவமை காட்டி வந்தாள் ஆனால் இம்முறை கண்ணன் போன்ற திருமேனி கொண்ட வண்டு, கண்ணன் போலக் கருத்து நின்ற மேகம், கண்ணன் போன்ற நிறம் கொண்ட செந்தாமரை என்று மாற்றி உவமை சொல்கின்றாள். 
உவமேயமும் ,உவமானமும் கூறப்படும் பொருட்களை மாற்றி ஒன்றுகொன்று உவமானமாகச் சொல்வது.. 

இதற்குப் பெயர் "இதர விதர உவமை "

இது பற்றிப் படித்ததில்  இணையத்தில் சுவராசியமாக ஒரு பாடல் கிடைத்தது 

களிக்கும் கயல் போல நும் கண் நும் கண் போல் 
களிக்கும் கயலும் ;கனிவாய்த் தளிர்க் கொடியீர் 
தாமரை மலர் போல் நும்முகம் ; நும்முகம் போல் 
தாமரை போல் செவ்வி தரும் 

"தளிரோடு கூடிய கொடி போன்ற பெண்களே !  மீன்களைப் போல உங்கள் கண்கள் களிக்கின்றன..உங்கள் கண்களைப் போல   மீன்களும் களிக்கின்றன .தாமரை போல உங்கள் முகம் இருக்கின்றது.. உங்கள் முகத்தைப் போல தாமரையும் செம்மையாக மலர்ந்து உள்ளது 
இதைப் போலத்தான் திருமால் போல் கருத்த மேனி என்கிறாள் வண்டினங்களைப் பார்த்து :) 
கண்ல தட்டுப்படுவது எல்லாம் அவன் நினைவை ஊட்டும் அளவுக்குக் காதல் பித்து முற்றிப் போனது..கண்ணில் தட்டுப்படுபவற்றிடம் எல்லாம் நியாயமும் கேட்கிறாள். வண்டே ,பூஞ்சுனையே பூஞ்சுனையில் தங்கி இருக்கும் செந்தாமரையே ..சொல்லுங்க எனக்கு ஓர் சரண் சொல்லுங்க..\

பொதுவாக ஓர் என்று வந்தால் அடுத்து ஆரம்பிக்கும் சொல் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் ஓர் உயிர் இப்படி. உயிர்மெய் எழுத்து போன்றவற்றிற்கு ஒரு.. ஆனால் பல பாடல்களில் இந்த விதி இளகி இருக்கின்றது..அப்பாடலின் பொருளுக்கு ஏற்ப ..
எத்தனைக் கடவுளர்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் தனக்கு வேண்டாம்..ஒரே ஒருவன் அந்த ஒரே ஒருவன் தனக்குப் போதும் அந்த ஒருவனே நமக்குச் சரண் என்கிறாள்.     


( திருப்பாவையில் இற்றைக்கும் ஏழேழ்  பிறவிக்கும் பற்றாவான் , வாரணம் ஆயிரத்தில் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி என்கிறாள் இப்படிப் பல பாடல்களில் அவள் சரண் எனச் சொல்வது திருமால் ஒருவனைத் தான் (ஒருமையில் எழுத ஏதோ தடுக்கிறது :)  இவ மட்டும் திருமாலை அவன் இவன் எனலாமாம் .அவள் சொன்னதை நான் அப்படியேச் சொன்னால் அவளுக்கு என்னவாம் :) )



Thursday 20 October 2016

87.பைம்பொழில் வாழ்குயில்காள்

87.பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்

பாடல் : 87

பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே

விளக்கம் :
 பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள் - பசுமையான சோலையில் வாழும் குயிலினங்களே , மயில்களே , அழகிய கருவிளை மலர்களே !
வம்பக் களங்கனி காள் வண்ணப் பூவை நறுமலர்காள் - வாசனை மிகுந்த களங் கனிகளே அழகியவண்ணம்  கொண்ட நறுமண மலர்களே !
ஐம்பெரும் பாதகர்காள் அணி மால் இருஞ்சோலை நின்ற - ஐம்பெரும் பாதகர்களே திருமாலிருஞ்சோலை நின்ற
எம் பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே - நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு ஏன் ? என்னை வதைப்பதற்கா ?

பசுமை மிக்க சோலையில் வாழும் குயில்களே, மயில்களே, அழகிய கருவிளை (சங்குப்பூ ) மலர்களே ! வாசனை மிக்க களாம் பழங்களே !வண்ணம் கொண்ட நறுமணம் மிக்க  காயா  மலர்களே !

Image result
Add caption
ஐம் பெரும் பாதகர்களே !(மேற்சொன்ன  ஐந்தையும் தான் சொல்கின்றாள் )
உங்களுக்கு எதுக்கு எம் பெருமானுடைய நிறம்..? அவர் நிறத்தில் நீங்கள் இருந்து கொண்டு அவன் நினைவை எப்பொழுதும் நினைவூட்டி வதைப்பதற்காகவே இந்நிறம் எடுத்துப் பிறந்தீர்களா.. இப்படிச் செய்ததாலேயே நீங்கள் பாதகர்கள் ஆனீர்கள் போங்கள் !

காதலின் பித்து நிலை ..எப்பக்கம் பார்த்தாலும் அவன் பிம்பமாகத் தெரிவது :) அவன் நிறத்தைக் கொண்டு அவனை நினவூட்டியதால் மிகப் பெரும் பாவியானார்கள் இவர்கள்..
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக எம்பெருமானின் நிறம் என்ற ஒரே காரணத்துக்காகப் பாவியாக்கி விட்டிருக்கிறாள் அவற்றை :)
 ஏய்..கோட்டிப் பெண்ணே..!




Wednesday 19 October 2016

86.கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்

86.கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்

பாடல் : 86
கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்
திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.

விளக்கம் :

கருவிளை ஒண் மலர்காள் காயாமலர் காள் - அழகிய கருவிளை மலர்களே காயாம்பூக்களே
திருமால் உருவொளி காட்டுகின்றீர்  எனக்கு உய்ய வழக்கு ஒன்று உரையீர் - என் திருமாலின் உருவத்தை நினைவூட்டுகின்றீர்கள்  திருமால் மேல வழக்கு ஒன்னு இருக்கு அதற்குத் தீர்ப்புச் சொல்லுங்கள்
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி - திருமகள் விளையாடும் திடம் மிக்க தோள் கொண்ட திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இல்  புகுந்து வந்தி பற்றும் வழக்குள்ளதே -  என் வீட்டிற்குள் புகுந்து என் வளையல்களைப் பலவந்தமாகத் திருடிய கள்வன் இவன்..அந்த வழக்கு ஒன்றும் இவன் மேல் உள்ளது ..நீங்களே இதுக்கும் தீர்ப்புச் சொல்லுங்க

அழகிய கருவிளை மலர்களே !
Image result
கருவிளை (சங்குப்பூ )
காயாம்பூக்களே ! (இவை பூக்குமே அன்றி காய்க்காது என்பதால் இந்தப் பெயராம்  இவை திருமாலுக்கு மட்டுமே உரியவை )

Image result
காயாம்பூ
பூக்களை நீதிபதியாக்கி நியாயம் கேட்கிறா..ஏன்னா அதுங்க வேற திருமால் உருவத்தை நினைவூட்டும் நிறத்தைப் பெற்றிருக்கின்றன.. யாரால்  இந்தத் துன்பத்துக்கு ஆளானேனோ அவரையே நினைவூட்டி எரியிற தீயில் எண்ணையை ஊற்றுகின்றன.. அந்த திருமால் மீது வழக்கு ஒன்னு இருக்கு நீங்களே இதற்குத் தீர்ப்பு வழங்குங்கள்
Image result



திரு விளையாடும் திண் தோள்.. தன்னைச் சேராமல் திருவோடு கூடி மகிழ்ந்திருக்கின்றார் திருமால் என்றொரு குற்றச்சாட்டு ,பொறாமை கலந்த ஏக்கம் ..அவங்க தான் அப்படின்னா ,  அட கோதையோட சக்களத்தி  திரு , திருமாலின் வலிந்த தோளைத் தழுவிக் கொண்டிருக்கிறாளாம். அந்தத் திருமாலிருஞ்சோலை நம்பியானவர் என் வீட்டுக்குள் புகுந்து பலவந்தமாகப் பற்றி  என் வளையல்களைக் களவாடிச் சென்றிருக்கிறார்  என்று நான் இங்கே வழக்குரைக்க வந்திருக்கிறேன் இதுக்கும் சேர்த்தே நீங்களே  பைசல் பண்ணுங்க 
Image result

ஏன் வளையல்களைத் திருடினார் எனக் குற்றம் சாட்டுகிறாள்.. எந்நேரமும் அவரையே நினைச்சு நினைச்சு அந்த நினைப்பில் மெலிந்தாள் ..மெலிந்த தேகத்தில் உருண்டு திரண்டிருந்த கைகளின் சதைகள் வற்றிப் போயின.. அதனால் அங்கே  தங்க முடியாமல் வளைகள் உருண்டோடின.  அப்ப அதுக்குக் காரணம் யாரு?...எல்லாம் இந்தப் பாழாப்போன காதல் தானே..அந்தக் காதலின் நாயகன் தானே ? உடம்பில் இருந்த வடிவமும் வளைவுகளும் கூட நீங்கின அழகான வளைவுகள் எல்லாம் ஒடிந்த தேகத்தில் காணாமப் போயின.. :(
இப்படி என் உடல்நிலையும் உள்ள நிலையும் மோசமாகப் போகக் காரணமானவன் மீது வழக்கு தொடுத்துள்ளேன்..அதற்கு நல்லதொரு தீர்ப்புச் சொல்லுங்கள்.. 



Monday 17 October 2016

85.போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்

85.போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்

பாடல் :85

போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்
ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே

விளக்கம் :
போர் களிறு பொரும் மால் இருஞ்சோலையம் பூம்புறவில் - போர் புரியும் தொழிலைக் கொண்ட  யானைகள்  இருக்கும் மால் இரும் சோலை மலைச்சரிவுகளில்
தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற - வரிசையாக உள்ள முல்லை அரும்புகள் , அழகரின் வெண்மையான சிரிப்பை காட்டுகின்றன
கார்க் கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் -  அரும்புகள் கொண்ட பிடவம் கொடிகள் பூத்து நின்று இடித்துரைத்துச் சிரிக்கின்றன அதைப் பொறுக்க முடியவில்லை
ஆர்க்கிடுகோ தோழி அவன் தார்ச் செய்த பூசலையே -  அவன் தோள் மாலை என்னை எள்ளியதால் எனக்கும் அவற்றுக்கும் யார் அழகரின் தோள் சேர்வது என்ற சண்டையை  நான் யாரிடம் சென்று முறையிடுவேன் தோழி

புறவு - மலையும் காடும் ஒன்று சேரும் இடம் -தாழ்வரை

போர் புரியும் தொழிலைக் கொண்ட யானைகள் திருமால் இரும் சோலை தாழ்வரைகளில் ( புறவு - மலையும் காடும் ஒன்று சேருமிடம் மால் இருக்கும் காட்டு நிலம் முல்லை நிலம் .பூக்கள் பூக்கும் காடு ) விளையாடுகின்றன..
வாசனை கொண்ட இந்த முல்லைகளும் ,அரும்புகள் கொண்ட பிடவம் பூக்களும் மாலையாகி அழகரின் தோளை அலங்கரிக்கின்றன.. அந்த முல்லை அரும்புகள் அழகரின் வெண்மையான சிரிப்பைக் காட்டுகின்றன..அந்தப் பிடவம் பூ மாலையோ ,"பார்த்தாயா நான் உன்னவனின் தோளில் இருக்கின்றேன் என்கிறது .

பிடவம் பூ 
 இந்தக் கோதை (மாலை என்று பொருள் )  சென்று சேர வேண்டிய தோளினை முல்லைகளும் பிடவம் பூக்களும் ஆக்கிரமித்துக்கொண்டு அங்கிருந்து என்னை இகழ்கின்றன.. இடித்துரைக்கின்றன  அதைக் கண்டு எனக்குப் பொறுக்க முடியவில்லை .

ஆமா யானை பூஞ்சோலையில் விளையாடினால் பூக்கள் என்னவாகும் ..? நொந்து நூலாகும்..  ஆனால் இந்தச் சோலைப் பூக்கள் எல்லாம்  சிரித்துக் கொண்டிருக்கின்றன ..ஆனால் மா களிறு அன்ன அழகன் என் மனம் புகுந்ததில் நான்தான் பாடாய்ப்பட்டுப் போனேன்  .இப்படி இடித்துரைப்பதால் எனக்கும் அந்தப் பூக்களுக்கும் நடக்கும் சண்டையை நான் எங்கு சென்று முறையிடுவேன் தோழி ?


ஆங்..நான் என்னாண்டு சொல்லுவேன் 
ஆரு கிட்ட சொல்லுவேன்..
பொல்லாத காதலும் நில்லாத ஆசையும் 
சொல்லாமப் பொத்தி வச்சேன்..
கொல்லாதே என்கணவா
 வெல்லாமப் போயிடுமோ வெறும் கனவா..
இந்தப் பூக்களும் தான் கைகொட்டிச் சிரிக்குதே 
அது முள்ளா என் மனசத் தைக்குதே  
ஊர் சிரிக்கும் நாள் வருமுன்னே 
நீ வந்து சேர் என்  பெயரின் பின்னே !

எப்பூடி என் கவித ?:)





Friday 14 October 2016

84 . சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்

84.சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்

நாச்சியார் திருமொழி  ஒன்பதாம் பத்து இனிதே ஆரம்பம் :) இந்தப் பத்துப் பாடல்களும் ஆண்டாள் , அழகருக்குச் சமர்ப்பணம் செய்தவை .திருமால் இரும் சோலை எனப் பெயர்பெற்ற அழகர்மலை அல்லவா ? அதனால் அங்கிருக்கும் பூக்களிடம் பிதற்றுகிறாள் இந்தப் பூவை .
 முன்பு ஒருமுறை கீழிருந்து அழகர் மலை மேலே நடந்து  சென்றது ஓர் அற்புதமான அனுபவம்.. மேலிருந்து வரும் தண்ணீர் வரும் வழி நெடுக பசுமை.. பல திரைப்பாடல்கள் அழகர் மலையில் படமாக்கப்பட்டிருக்கின்றன.. அழகர்கோயில் செல்லும் வழியே முன்பு பசுமையாக இருக்கும்.  ஆனால் நம் மக்களுக்குத்தான் எதையும் பராமரிக்கத் தெரியாதே..அதனால் அன்று ஆண்டாள் கண்ட அழகர்மலை இன்று இல்லை.
Image result for அழகர்கோயில்
அழகர்கோயில் 

 மதுரைக்குப் பெருமை சேர்க்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைப் பெருவிழா இந்த மலைவாழ் பெருமாள் தான் .பாண்டிய வைணவத் தலங்களில் முதன்மையானது . அழகான கோட்டை வாசல் வரவேற்கும் . ஆங்காங்கே பழமையின் எச்சங்கள் இன்றும் . மலை மீதுள்ள ஊற்று எங்கிருந்து தோன்றுகிறது என்றே சொல்ல முடியாது.. வற்றாத ஊற்று அது . இன்று நூபுர கங்கை எனப் பெயர் மாற்றம் பெற்ற ,  அதன் உண்மைப் பெயர் என்னவென அறிய இந்தப் பத்துப் பாடல்களைத் தொடர்ந்து படியுங்கள். . பதினெட்டாம்படி கருப்பு தான் முதலில் வரவேற்பார் .

அவருக்குப் பலி (ஆடு அல்லது கோழி )  கூடக் கொடுப்பார்கள்.    மலை மேலே பழமுதிர்சோலை முருகன் அதற்கும் மேலே ராக்காயி அம்மன் கோவில் . கொசுறுத் தகவல் அழகர்மலை போனா நெய்த் தோசை வாங்கிச் சாப்பிடாம வராதீங்க :)


பாடல் : 84
சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ

விளக்கம் :
 சிந்துரச் செம்பொடிப் போல் திருமால் இரும் சோலை எங்கும் -  பற்பல வண்ணங்கள் கொண்ட செம்மையான நுண்  பொடி போல திருமால் இருக்கும் சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் - பல வண்ணங்கள் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளானவை மேலெழும்பியும் பரந்தும் சோலைக்கு வண்ணங்கள்  இட்டன
மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட - மந்தர மலையைக் கடைந்து அமிழ்தம் பெற்ற பிறகு தோன்றிய ,   அமிழ்தம் போன்ற திருமகளை உண்டவன்
சுந்தரத் தோள் உடையான் சுழலை யினில் இன்று உய்துங் கொலோ - அழகிய தோளை உடையவன் காதல் என்னும் சுழலில் சிக்கிக்கொண்ட நான் இதிலிருந்து எப்படி மீள்வேன் ?

சிந்தூரம் என்பது செந்தூரம் என ஆகிவிட்டது தற்பொழுது. சிவப்பை மட்டுமே குறிப்பதாகவும்..

பற்பல வண்ணங்கள் கொண்ட செம்மையாக அரைத்த நுண்பொடி போல , வண்ணத்துப் பூச்சிகள் மலை மீது மேலே எழுந்தும் பரவியும் தன் வண்ணங்களை மலைக்கு இட்டன

மந்தர மலையைக் கடைந்த பிறகு தோன்றியவள் திருமகள்.. அவளைத்தான் இங்கே மதுரக் கொழுஞ்சாறு என வர்ணிக்கிறாள் கோதை..  அதுவும் மிகக் கெட்டியான (நீர்த்துப் போய் இல்லாம அடர்த்தியாக இருக்கும் -கொழுஞ் சாறு ) அப்படி இனிமையான பிராட்டியைக் கொண்டவன் ( கணவன் ) அதாவது  அவளை உண்டவன் அவளைக் கொண்டவன் :) (உள்ள கொஞ்சம் லைட்டா பொறாமை தெரியுதுல்ல :)) )
அழகிய தோளுடையோன் அவனது காதல் வலையில் சுழன்று கொண்டிருக்கிறேன்.. அதில் இருந்து மீள்வேனோ ?
Image result

எந்நேரமும் அவனையே நினைக்கின்றாள்..அவன் மீதான காதலையேச் சுமக்கின்றாள் அதிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்குமா என்று சலித்துக் கொள்கிறாள்


விடுதலையை விரும்பாமல் அதிலேயே சுழல்வதும் பின்னர் அவன் சுழலிலே தான் சிக்கிக்கொண்டதாக குற்றம் சாட்டுவதும் அப்பப்பா..பொல்லாதவர்களப்பா இந்தப் பெண்கள் !

Saturday 8 October 2016

83.நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்

83.நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்
பாடல் :83
நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே

விளக்கம் :
 நாகத்தினை அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்  - நாகத்தினை படுக்கையாக்கிப் படுத்தவனை அழகிய நெற்றியை உடைய பெண் நயந்து உரை செய்த
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் திரு வேங்கட அரசனுக்கு மேகத்தைத் தூது விட்டு  விண்ணப்பம் செய்த
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் - ஒழுக்கத்தில் வழுவாத வில்லிபுத்தூர் தலைவன்  பெரியாழ்வார் மகள் கோதை தமிழ்ப் பாடல்களை
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியாராக ஆகுவரே ! - தங்கள் அகத்திலே வைத்து உரைப்பவர்கள் பெருமானின் அடியவர் ஆகுவார்களே !

நாகத்தினை அணைத்துக் கொண்டு கிடப்பவனை ,அழகிய நெற்றியை உடைய பெண் நயந்து உரை செய்த ,மேகத்தைக் கொண்டு வேங்கட அரசனுக்கு தூது விட்டு விண்ணப்பம் செய்தவளுமான


வழுவாத நெறியுடைய வில்லிபுத்தூர் தலைவர்  பெரியாழ்வாரின் மகள் கோதை சொன்ன இந்தப் பத்துப் பாடல்களையும் நெஞ்சகத்தே வைத்து உரைப்பவர்கள் பெருமாளின் அடியவர்கள் ஆவார்கள் !

திருவேங்கடமுடையானுக்கு மேகத்தைத் தூதாக விட்ட பாடல்களைக் கொண்ட  நாச்சியார் திருமொழி எட்டாம் பத்து இனிதே நிறைவுற்றது !

Thursday 6 October 2016

82.மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்

82.மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்

பாடல் :82
மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே

விளக்கம் :

மதயானை போல் எழுந்த மாமுகில்காள்  - மதம் கொண்ட யானையைப் போல கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே !
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே ? - வேங்கடத்தை உறைவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே ! பாம்பின் மீது படுத்திருப்பவன் வார்த்தை தான் என்ன? அவர் என்னதான் சொல்கின்றார் ?
கதி என்றும் தானாவான் கருதாது ஒரு பெண்கொடியை -  அனைவருக்கும் புகலிடம் அவன்தான்  அவனே கதி என்று இங்கு ஒருத்தி இருக்கிறாளே அப்பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே - அவளைச் சென்று சேராமல்  வதை செய்தான் என்னும் கெட்ட பெயர் அவருக்கு உண்டானால் உலகத்தார் அவனை மதிக்க மாட்டாங்க

மதம் கொண்ட யானை எவ்வளவு பிரம்மிப்பையும் பயத்தையும் ஒரு சேர உண்டாக்குமோ அதைப் போல கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே !
திருவேங்கடத்தை உறைவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே ! பாம்பு மேல படுத்திருக்கிறவன் ஏதாவது வார்த்தை எனக்குச்  சொன்னாரா? (வீட்டில் இந்தா அவ என்னாங்குறா என்று வயதான கிழவிகள் கேட்பார்கள் அதைப் போல கேட்கிறாள்.. இந்தா.. அந்த பாம்பை அணைச்சுக்கிட்டு கிடக்குறானே அந்தக் கிறுக்குப்பய ..அவன் என்னாங்குறான் ?:)) )


அடியவர்களுக்கு என்றும் புகலிடம் , தானே ஆவான் . அப்படிப்பட்டவனையே நினைத்துக் கொண்டு ஒருத்தி இங்க இருக்கிறாளே அந்த நினைப்பு கொஞ்சமாச்சும் அவருக்கு இருக்குதா ? நம்பி வந்தவங்களைக் கை விடுவது அவன் வழக்கம் இல்லையே..அப்படி இருக்க அவனையே நம்பி இருக்கும் இப்பெண் கொடியை , சேராமல் வதை செய்தான் என்ற அவப்பெயர் அவனுக்கு வந்தா உலகம் அவனை மதிக்குமா ? நீயே சொல்லு நியாயத்தை ..


இந்தப் பொண்ணு இருக்கே..கோதை பொண்ணு மிரட்டுது அரற்றுது .. பழி சொல்லுக்கு அஞ்சணும் என்று மறைமுகமா இடித்துரைக்குது ..பெரிய வித்தகி ..ஆனால் ஆத்மார்த்தமான காதல் கொண்டவள் ..
வேண்டாம் வேணு கோபாலா உனக்கிந்த கெட்டப் பெயர்..உனக்கு நல்லத எடுத்துச் சொல்ற உரிமை எங்களுக்கும் உண்டு :)) 

Wednesday 5 October 2016

81.கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்

81.கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்
பாடல் : 81
கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை
வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே!

விளக்கம் :

கார்காலத்தே எழுகின்ற கார்முகில்காள்  வேங்கடத்துப் - மழைக் காலத்தே எழுகின்ற வேங்கட  மழை மேகங்களே
 போர்காலத்தில் எழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி  -  போர் காலத்தில் எழுந்தருளிப் போர் புரிந்தவரின் பேர்  சொல்லி
நீர் காலத்து எருக்க  இலம் பழ விலை போல் வீழ்வேனை - நீர் சூழ்ந்த காலத்து பழுத்த எருக்க இலை போல் ஒடிந்து  வீழ்வேனே
வார்காலத்து ஒருநாள்தம் வாசகம் தந்து அருளாரே - வருங்காலத்தில் நான் வாழ ஒரு நாளாவது என் உயிரைப் புதுப்பிக்கும் வாசகம் தந்து அருளச் சொல்லுங்கள்

மழைக்காலத்திலே திருமலையில் எழுகின்ற மழை மேகங்களே !
இராவணனுடன் போர் புரிய நேரிட்ட போர்க்காலத்தில் எழுந்தருளி இராமபிரானாரின்  பேர் சொல்லி


மழைக்காலத்தில் பழுத்து விழுகின்ற எருக்க இலை போல ஒடிந்து கீழ் விழுகின்ற எனக்கு, எதிர் வருங்காலத்தில் ஒருநாளாவது என் உயிர் வாழ வேங்கடவன்  . எனைச்  சேர  தான் வருவதாக  உங்களிடம் சொன்னார்  என்றொரு நல் வாசகம் தந்து அருளச் சொல்லுங்களேன் !


ஒவ்வொரு முறையும் அவன் பேர் சொல்லி என்ற சொல்லாடலைச் சொல்கிறாள் ஆண்டாள்.. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, கோவிந்தன் குணம் பாடி, பொருதவனார் பேர் சொல்லி  .. அவன் பெயரைச் சொல்வதிலேயே அவ்வளவு உவகை கொள்கிறாள் .கண் இமைக்கும் அளவு நேரம் கூட அவனது திருநாமத்தைச் சொல்ல அவள் மறக்கவில்லை எந்நேரம் சிந்தையில் அவனே
"வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் "
என்று திருப்பாவையில் ஐந்தாம் பாடலில் சொல்கின்றாள்..
அவனை  மனத்தினால் சிந்தித்து  திருநாமங்களைச் சொன்னோமேயானால்
நாம் முன்வினைச் செய்த பாவங்கள் கூடத் தீயினில் தூசாகும் என்கிறாள்..
அதை நாச்சியார் திருமொழி   ஒவ்வொரு இடத்திலும் அவ்வப்பொழுது நமக்கு நினைவூட்டுகிறாள்..
போர்க்காலத்தில் எழுந்தருளி போர்புரிந்த (பொருதவனார் -பொருதுதல் -போர் புரிதல் )  இராமபிரானாரின்  பேரைச் சொல்லிகிட்டே இருக்கேன்..மழைக்காலத்தில் பழுத்து கீழே விழும் எருக்க இலை போல ஒடிந்து விழுகின்றேனே அதற்காகவாவது இரக்கப்பட்டு என்னிடம் சொல்லச் சொல்லி ஏதேனும் வாசகம் தந்தருளினாரா ? வருங்காலத்தில் நான் வாழ , துரும்பையும் தூணாகப் பற்றி நான் வாழ்ந்திருக்க அந்த ஒரு வாசகம் போதுமே ஒருநாளாவது சொல்லச் சொல்லுங்களேன் !