80.சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்
பாடல் :80சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே
விளக்கம் :
சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள் - சங்குகள் நிறைந்த கடலைக் கடைந்தவன் வாழும் வேங்கடத்தில் இருக்கும் குளிர்ந்த மேகங்களே !
வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் - செம்மையான கண்களுடைய திருமாலின் திருவடி வீழ்ந்து என் விண்ணப்பம் வையுங்கள்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் - என் மார்பின் மீது குங்குமக் குழம்பு அழிய அவன் அணைத்து என்னைச் சேர்கின்ற நாளில்தான்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே - என் உயிர் தங்கும் என்று அவனிடம் உரைத்து விடுங்கள்
சங்குகள் நிறைந்த பெருங்கடலைக் கடைந்தவன் வாழும் வேங்கடத்தில் இருக்கும் குளிர்ந்த மேகங்களே !
செம்மையான கண்களுடைய வேங்கடத்துத் திருமாலின் திருவடியின் கீழ் என் விண்ணப்பம் ஒன்றை வையுங்கள்
என் கொங்கைகளின் மீது குங்குமக் குழம்பு அழிய மார்பில் புகுந்து எனை அணைத்து ஒருநாளாவது அவன் அங்கு தங்கினான் எனில் என் உயிரும் என் உடலிலேயே தங்கி விடும் என்று அவனிடம் உரைத்து விடுங்கள் !
தன் காதலனின் மீதான காதலையும் தாபத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தி இருக்கிறாள். அவளை மார்போடு இறுக்கி அணைக்கனுமாம்..குங்குமக் குழம்பு அழியணுமாம்..குங்குமம் நெற்றியில் தானே பூசுவோம்..மார்பில் எப்படி.. அதுவும் குழம்பாக ( எக்கசக்க குங்குமம் கூழ்மக் கலவையாக ) ?
அதான் ஏற்கனவே வாரணம் ஆயிரம் பாடலில் சொன்னாளே ..
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து என்று ...மணப்பொண்ணுக்கு நலங்கு வைக்கிறப்ப குங்குமமும் சந்தனமும் உடல் முழுக்க பூசுவாங்க .. உடல் நறுமணம் பெற.. அந்தக் குங்குமம் எல்லாம் அழியனுமாம்..இறுக்கி அணைத்த வியர்வையில் குழம்பாக மாறிய குங்குமம் அழிய அழிய அவன் என்னைச் சேரனும்..ஒருநாளாவது ஒரேயொரு நாளாச்சும் அவன் என்னுள் தங்கினால் , அந்த ஆசுவாசத்திலே என் ஆவியும் என் உடல் தங்கும் என்று அவனைப் பார்த்தால் உரையுங்கள்
இந்தப் பாடலைப் படிக்கவும் எனக்கு S ஜானகி அம்மா பாடிய நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் நினைவுக்கு வந்தது..
குங்குமம் ஏன் சூடினேன்
கோல முத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்..
பெண்ணின் தாப உணர்வுகளைச் சொல்லும் பாடல்கள் வெகு குறைவு..அரிதாக இது போல :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!