பாடல் : 02
ஒன்று மறிவொன்றில் லாத
உருவறைக் கோபாலர் தங்கள்
கன்றுகால் மாறுமா போலே
கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறிசெய்து போனான்
நாராய ணன்செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்குஓ
ரேச்சுக்சொ லாயிடுங் கொலோ.
விளக்கம் :
ஒன்றும் அறிவு ஒன்றில்லாத - சேரும் அறிவு ஒன்று இல்லாத
உரு அறைக் கோபாலர் - உருவம் அழகற்ற கோபாலர்( மாடு மேய்ப்பவர்கள் )
தங்கள் கன்று கால் மாறுமா போலே - தங்கள் கன்று தாங்களே அறியாமல் தன் அம்மாவிடம் இருந்து பிரித்து வைக்கப்படுவது போலே
கன்னி இருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் - என் வீட்டில் இருந்த கன்னியை , நல்லவன் போல நடித்துக் கொள்ளை கொண்டு போனான்
நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு - நாராயணன் செய்த தீமை என்றும் எங்கள் குடும்பத்துக்கு
ஓர்ஏச்சுச் சொல் ஆயிடுங் கொலோ - ஒரு பழி சொல்லுக்கு இடம் கொடுத்திடுமோ ?
ஒன்றும் - ஒன்றுதல் /சேருதல்
கிறி - உபாயம்
தாயும் கன்றும் இணைந்து இருத்தல் பற்றிய அறிவே இல்லாமல் உருவம் அழகற்ற கோபாலர்கள், தங்கள் கன்றை , அதுவே அறியாமல் அதன் அம்மாவிடம் இருந்து பிரித்து வைப்பது போலே , என் வீட்டில் இருந்த கன்னியை , நல்ல வழி கண்டுபிடித்து, அவளைக் கொள்ளை கொண்டு போனான். இப்படி கன்னியைக் கவர்ந்து சென்றதால் , நாராயணன் செய்த தீமை , வாழ்நாள் முழுவதும் எங்களின் குடும்பத்துக்கு தீராதப் பழி சொல்லைத் தந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

No comments:
Post a Comment
மறுமொழி இடுக!