67.சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
பாடல் : 67சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே
விளக்கம் :
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் - சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில் - எப்போதும் அங்கே இருந்து கொண்டு அவனோட காதில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே - ஏதோ இரகசியம் பேசுவாய் போல சங்கே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே - அந்த இந்திரன் கூட உன்னோட இந்த செல்வத்துக்கு ஈடாக மாட்டான்
வலம்புரிச் சங்கே ! அந்த சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் எப்போதும் அங்கேயே இருந்து கொண்டு , அவனது செவியில் ஏதோ அந்தரங்கம் பேசுவாய் போல .இப்பேர்ப்பட்ட பாக்கியம் உனக்கு. செல்வச் சீமானான இந்திரனும் கூட உன்னுடைய இந்தச் செல்வத்துக்கு ஈடாக மாட்டான்
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!