70.செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
பாடல் : 70செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
செங்கட்க ருமேனி வாசுதே வனுடய
அங்கைத்த லமேறி அன்னவ சஞ்செய்யும்
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே
விளக்கம் :
செங்கமல நாண்மலர் மேல் தேன்நுகரும் அன்னம் போல் - அன்று மலர்ந்த சிவந்த தாமரை மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய - சிவந்த கண்களும் கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனுடைய
அங்கைத்தலம் ஏறி அன்னவசம் செய்யும் - அழகிய கைத்தலம் ஏறி அங்கே கண் வளரும்
சங்கு அரையா ! உன் செல்வம் சாலவும் அழகியதே ! - சங்குகளின் தலைவா ! உன் செல்வம் மிகவும் அழகியதே !
புதுசா அன்னிக்குப் பூத்த சிவந்த தாமரை மலர் மேல் தேன் நுகரும் அன்னப்பறவையைப் போல சிவந்த கண்களும் கருத்த மேனியும் கொண்ட
கண்ணனின் சிவந்த இதழ்களை புதிதாய்ப் பூத்த தாமரைப்பூவிற்கு ஒப்பாகவும், பளிச்சென்று வெண்மையாக இருக்கும் சங்கை அன்னத்திற்கு ஒப்பாகவும் கூறுகிறாள் ஆண்டாள் :) கண்ணனின் வாயமுதம் பெரும் போதையாம் ஆதலால்தான் அதை உண்ட மயக்கத்தில் உறக்கம் வருகின்றதாம் :)
திஸ்ஆண்டாள் இஸ் ட்டூ ரொமாண்டிக் யூ நோ ?:)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!