71.உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்
பாடல் :71உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில்க டல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே
விளக்கம் :
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் - நீ உண்பது பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே - நீ உறங்குவது பற்றிச் சொல்வதென்றால் அது கடல் வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார் - இவ்வாறு நீ செய்வதனால் பெண்கள் கூட்டம் உன் மீது பெரும் குற்றம் சாற்றுகின்றனர் சண்டை போடுகின்றனர்
பண்பு அல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே ! - இப்பெண்கள் அனுபவிக்க வேண்டியவற்றை நீ ஒருவனே அனுபவிப்பது பண்பு அல்லவே நியாயமற்றதைச் செய்கின்றாய் பாஞ்சசன்னியமே !
பாஞ்சசன்னியமே ! நீ உண்பது பற்றிச் சொல்வதெனில் அது உலகளந்தான் வாயமுதம் ..நீ படுத்துறங்கிக் கொள்ளும் இடம் எதுவெனில் கடல்வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே /இதனால் மாதவன் மீது மையல் கொண்ட பெண்கள் கூட்டம் தங்களுக்குக் கிடைக்கவிடாமல் நீ ஒருவனே இவை யாவையும் அனுபவிப்பதால் உன்மேல் பெரும் குற்றம் சாற்றுகிறார்கள்..சண்டை இடுகிறார்கள் ..இது பண்பற்ற செயல்..இது நியாயமா அடுக்குமா ?
தனக்கு விட்டுக் கொடுக்காமல் , இந்த பாஞ்சசன்னியம் ஒருவனாக எல்லாவற்றையும் அனுபவிப்பது குறித்து உள்ளூர ஏக்கமும் பொறாமையும் கொண்டு குற்றம் சாற்றுகிறாள்.. :)
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!