95.மேற்றோன்றிப் பூக்காள்
பாடல் : 95மேற்றோன்றிப் பூக்காள் மேலுல
கங்களின் மீதுபோய்
மேற்றோன்றும் சோதி வேத
முதல்வர் வலங்கையில்
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து
வைத்துக்கொள் கிற்றிரே
விளக்கம் :
மேல் தோன்றிப் பூக்காள் - மரத்திலே பூத்திருக்கும் மருதாணிப் பூக்களே !
மேல் உலகங்களின் மீது போய் - மேல் உலகங்களின் மீது கடந்து சென்று
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலது கையில் - அதற்கும் மேலாகத் தோன்றும் ஒளி வடிவமான வேதங்களின் முதல்வர் வலக்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ் சுடர் போலச் சுடாது - மீது இருக்கும் சக்கரத்தின் கோபச்சுடர் போல என்னைச் சுடாமல்
எம்மை மாற்று ஓலைப்பட்டவர் -என்னை அவனுக்கு மாற்றோலை எழுதி
கூட்டத்து வைத்துக் கொள் கிற்றிரே - என் தலைவனின் கூட்டத்தில் என்னை வைத்து விடுகிறீர்களா ?
தோன்றிப் பூ - மருத்தோன்றி /மருதாணிப் பூ ..மருதாணி மரங்களின் மேலே பூத்திருக்கும் மருதாணிப் பூக்களே ! (மருதாணிப் பூக்கள் பஞ்சு போன்ற மென்மையானவை..அதனால் அவை மேலே பறப்பது எளிது என்பதால்தான் மேலோகம் போகச் சொன்னாளோ என்னவோ?)
மருதாணிப் பூ |
பெருமாளின் கையில் வளரி எனப்படும் ஆழி |
இந்த ஆழிச் சக்கரம் பற்றிச் சிறு குறிப்பு :
முல்லை நில மக்களின் ஆயுதம் இந்தச் சக்கரம்..வளரி எனப்படும் .உண்மையில் அரை வட்டமாக இருக்கும்
பூமராங் என்று இன்று அறியப்படும் இந்தச் சக்கரம் எறிந்தால் இலக்கை எட்டி விட்டு மீள நம் கைக்கே வரும்.. (இதை வைத்துத்தான் புராணப் படங்களில் சக்கரம் எதிரிகளை வீழ்த்திவிட்டு பெருமாளிடமே திரும்பி வருமாறு காட்சி அமைத்திருப்பார்கள் போலும் ) முல்லைநிலம் காடும் காடு சார்ந்த இடங்கள்..அங்கே மரங்கள் அடர்த்தியாக இருக்கும் போது விலக்கிக் கொண்டு போக முடியாது..அதனால் இலக்கைத் தாக்கியப் பின் திரும்ப வரும் ஆயுதம்.. பின்னர் வேட்டை நாய் சென்று வேட்டையாடப் பட்ட பொருளை எடுத்து வருமாம்..ஆகவே இது முல்லை நிலத்துக் கடவுளான மாயோன் கையில் இருக்கும்.
காத்திருக்கும் நாள் அதிகரிக்க அதிகரிக்க இந்தப் பெண்ணுக்குப் பித்துப் பிடித்து விடுகிறது ..இது காரணமோ அது காரணமோ என்ன காரணமோ என என்னவெல்லாமோ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாள்..நாம் அவருக்குத் தகுதியானவள் தான் என்று தரச் சான்றிதழ் கேட்கிறாள் பூக்களிடம்.. அப்படியேனும் அவர் அடி சென்று சேரத் தடைகள் இராது என எண்ணுகிறாளோ என்னவோ..சரியான தோள்களைச் சென்றடையக் கோதைக்குத் தான் எவ்வளவு தடைகள் ..அந்தக் காலத்தில் பத்தர மாற்றுத் தங்கம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. அப்படியாப்பட்ட பொண்ணுப்பா இது .. ஆனால் பூக்களிடம் இப்படிக் கேட்கும் நிலை கொடிது :(
அவன் தரத்துக்கு தான் சமன் இல்லை என்று எவரும் சொல்லித் திருமணத்தை நிறுத்தி விடக் கூடாது இல்லையா ?
சொல்லுங்கள் மணந்தால் மகாதேவன் இல்லையே மரண தேவன் என்றிருக்கும் இந்தப் பெண்ணின் உறுதி பற்றிச் சொல்லுங்கள் என் தரம் என்னவென அங்கே உணர வையுங்கள் என்கிறாள் கோதை
அவன் தரத்துக்கு தான் சமன் இல்லை என்று எவரும் சொல்லித் திருமணத்தை நிறுத்தி விடக் கூடாது இல்லையா ?
சொல்லுங்கள் மணந்தால் மகாதேவன் இல்லையே மரண தேவன் என்றிருக்கும் இந்தப் பெண்ணின் உறுதி பற்றிச் சொல்லுங்கள் என் தரம் என்னவென அங்கே உணர வையுங்கள் என்கிறாள் கோதை
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!