97.முல்லைப் பிராட்டி
பாடல் 97முல்லைப் பிராட்டி நீயுன்
முறுவல்கள் கொண்டுஎம்மை
அல்லல் விளைவியே லாழிநங்
காய் உன்ன டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால்
நானும் பிறந்தமை பொய்யன்றே
விளக்கம் :
முல்லைப் பிராட்டி - முல்லைப் பிராட்டியே!
நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியே - நீ உன் புன்முறுவல்கள் கொண்டு எமக்குத் துன்பம் விளைவிக்காதே
ஆழி நங்காய் உன் அடைக்கலம் - சக்கரப் பொறி கொண்ட நங்கையே உன்னையே அடைக்கலம் எனப் புகுந்தேன்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட - அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட
குமரனார் - குமரனார்
சொல்லும் பொய்யானால் - சொல்லும் பொய்யாகிப் போனால்
நானும் பிறந்தமை பொய் அன்றே - நானும் பிறந்ததும் பொய் ஆகி விடுமே
முல்லைப் பிராட்டியே ! நீ அழகாகப் பூத்துப் புன்முறுவல் செய்கிறாய்..அந்த முறுவல்களைக் கொண்டு எமக்குத் துன்பம் விளைவிக்காதே..(நானே இங்க வருத்ததுல இருக்கேன் ஆனா நீ சிரிப்பது எனக்கு வேதனையைத் தருகிறது உன்னை ரசிக்க முடியல நீ மகிழ்ந்து இருப்பது போல என்னால் மகிழ்ந்து இருக்க முடியல ..அவரோட சேர்ந்து ரசிக்க வேண்டியவற்றை இப்படித் தனியாகப் பார்ப்பது துன்பத்தையே தருகிறது ) பூத்திருக்கும் முல்லைப் பூக்கள் அழகரின் புன் முறுவலை நினைவூட்டி துன்புறுத்துகின்றன போலும்.
முல்லைப் பூ |
முல்லை என்பது முல்லை நிலத்திற்கான பூ..முல்லை நிலக் கடவுள் மாயோன்.. (மால் ) ஆழி நங்கை என்ன என்பது பற்றி விசாரித்து அறிந்ததில் அந்த மாயோன் கோட்டங்களில் முல்லைப் பூக்களைக் குவிச்சுக் கட்டிக் குறி சொல்வதால் முல்லைக் கட்டுவிச்சி.. (ஆழி என்பது முல்லை நில மக்களையும் குறிக்கும் /ஆயுதத்தையும் ) கையில் சக்கரத்தைப் பச்சை குத்தி இருப்பார்களாம் . முல்லை நிலத்துக்கு உண்டானது இந்தச் சக்கரம்.. (வளரி ) இந்த முல்லைக் கட்டுவிச்சிகள் இளம்பெண்களைப் பருவ/உடல் மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவார்களாம் .
சூர்ப்பனகையின் மூக்கை வெட்டிய குமரனார் (இலக்குவன் தானே சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது....எனினும் இவள் ஏன் இராமன் மீது இந்தப் பழியைப் போடுகின்றாள் ? அறியாமல் செய்தாளா... ? அறிவுப் பெண்ணாகிற்றே.. பிறகு ஏன் எப்படி..? இலக்குவனா வந்து , அவர் உன்னை வந்து சேர்வார் எனச் சொல்லி இருப்பார் ? அது பொய்யாகிடுமோ என அச்சம் கொள்கிறாளா..? இல்லை இலக்குவனுக்கு அவ்வாறு செய்யச்சொல்லி ஆணை இட்டது இராமன் என்பதால் நேரடியாக இராமனையே இங்கு குற்றம் சாட்டுகிறாள்..
பெண்ணாக இருந்தும் துன்பம் செய்ய வந்ததால் அவள் மூக்கை அரிந்தவன் நீ , ஆனால் இன்று இப்பெண்ணைத் துன்புறுத்துதல் நியாயமா ?இதற்கு என்ன தண்டனை உனக்குத் தருவது? (ஏற்கனவே இரட்டை நாக்கு படைச்சவன் எனத் திட்டி விட்டாள் வேறு )
என்னை வந்து சேர்வேன் என்று சொல்லி விட்டு வராமல் போனால் நானும் பிறந்தது பொய் ஆகிடுமே (இப்பிறப்பே நான் அவரைச் சேர எடுத்தது..அதுவே நிகழாவிடில் இப்பிறப்பில் யாதொரு பயனும் இல ..வீண்_
"எனையே தந்தேன் உனக்காக
சென்மமே கொண்டேன் அதற்காக "
"வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ..
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறுமென் வேதனை
எனைத் தான் அன்பே மறந்தாயோ.."
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!