86.கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்
பாடல் : 86
கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்
திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.
விளக்கம் :
கருவிளை ஒண் மலர்காள் காயாமலர் காள் - அழகிய கருவிளை மலர்களே காயாம்பூக்களே
திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்ய வழக்கு ஒன்று உரையீர் - என் திருமாலின் உருவத்தை நினைவூட்டுகின்றீர்கள் திருமால் மேல வழக்கு ஒன்னு இருக்கு அதற்குத் தீர்ப்புச் சொல்லுங்கள்
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி - திருமகள் விளையாடும் திடம் மிக்க தோள் கொண்ட திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்குள்ளதே - என் வீட்டிற்குள் புகுந்து என் வளையல்களைப் பலவந்தமாகத் திருடிய கள்வன் இவன்..அந்த வழக்கு ஒன்றும் இவன் மேல் உள்ளது ..நீங்களே இதுக்கும் தீர்ப்புச் சொல்லுங்க
அழகிய கருவிளை மலர்களே !
கருவிளை (சங்குப்பூ ) |
காயாம்பூ |
திரு விளையாடும் திண் தோள்.. தன்னைச் சேராமல் திருவோடு கூடி மகிழ்ந்திருக்கின்றார் திருமால் என்றொரு குற்றச்சாட்டு ,பொறாமை கலந்த ஏக்கம் ..அவங்க தான் அப்படின்னா , அட கோதையோட சக்களத்தி திரு , திருமாலின் வலிந்த தோளைத் தழுவிக் கொண்டிருக்கிறாளாம். அந்தத் திருமாலிருஞ்சோலை நம்பியானவர் என் வீட்டுக்குள் புகுந்து பலவந்தமாகப் பற்றி என் வளையல்களைக் களவாடிச் சென்றிருக்கிறார் என்று நான் இங்கே வழக்குரைக்க வந்திருக்கிறேன் இதுக்கும் சேர்த்தே நீங்களே பைசல் பண்ணுங்க
ஏன் வளையல்களைத் திருடினார் எனக் குற்றம் சாட்டுகிறாள்.. எந்நேரமும் அவரையே நினைச்சு நினைச்சு அந்த நினைப்பில் மெலிந்தாள் ..மெலிந்த தேகத்தில் உருண்டு திரண்டிருந்த கைகளின் சதைகள் வற்றிப் போயின.. அதனால் அங்கே தங்க முடியாமல் வளைகள் உருண்டோடின. அப்ப அதுக்குக் காரணம் யாரு?...எல்லாம் இந்தப் பாழாப்போன காதல் தானே..அந்தக் காதலின் நாயகன் தானே ? உடம்பில் இருந்த வடிவமும் வளைவுகளும் கூட நீங்கின அழகான வளைவுகள் எல்லாம் ஒடிந்த தேகத்தில் காணாமப் போயின.. :(
இப்படி என் உடல்நிலையும் உள்ள நிலையும் மோசமாகப் போகக் காரணமானவன் மீது வழக்கு தொடுத்துள்ளேன்..அதற்கு நல்லதொரு தீர்ப்புச் சொல்லுங்கள்..
இப்படி என் உடல்நிலையும் உள்ள நிலையும் மோசமாகப் போகக் காரணமானவன் மீது வழக்கு தொடுத்துள்ளேன்..அதற்கு நல்லதொரு தீர்ப்புச் சொல்லுங்கள்..
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!