85.போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்
பாடல் :85
போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்
ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே
விளக்கம் :
போர் களிறு பொரும் மால் இருஞ்சோலையம் பூம்புறவில் - போர் புரியும் தொழிலைக் கொண்ட யானைகள் இருக்கும் மால் இரும் சோலை மலைச்சரிவுகளில்
தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற - வரிசையாக உள்ள முல்லை அரும்புகள் , அழகரின் வெண்மையான சிரிப்பை காட்டுகின்றன
கார்க் கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் - அரும்புகள் கொண்ட பிடவம் கொடிகள் பூத்து நின்று இடித்துரைத்துச் சிரிக்கின்றன அதைப் பொறுக்க முடியவில்லை
ஆர்க்கிடுகோ தோழி அவன் தார்ச் செய்த பூசலையே - அவன் தோள் மாலை என்னை எள்ளியதால் எனக்கும் அவற்றுக்கும் யார் அழகரின் தோள் சேர்வது என்ற சண்டையை நான் யாரிடம் சென்று முறையிடுவேன் தோழி
புறவு - மலையும் காடும் ஒன்று சேரும் இடம் -தாழ்வரை
போர் புரியும் தொழிலைக் கொண்ட யானைகள் திருமால் இரும் சோலை தாழ்வரைகளில் ( புறவு - மலையும் காடும் ஒன்று சேருமிடம் மால் இருக்கும் காட்டு நிலம் முல்லை நிலம் .பூக்கள் பூக்கும் காடு ) விளையாடுகின்றன..
வாசனை கொண்ட இந்த முல்லைகளும் ,அரும்புகள் கொண்ட பிடவம் பூக்களும் மாலையாகி அழகரின் தோளை அலங்கரிக்கின்றன.. அந்த முல்லை அரும்புகள் அழகரின் வெண்மையான சிரிப்பைக் காட்டுகின்றன..அந்தப் பிடவம் பூ மாலையோ ,"பார்த்தாயா நான் உன்னவனின் தோளில் இருக்கின்றேன் என்கிறது .
பிடவம் பூ |
ஆமா யானை பூஞ்சோலையில் விளையாடினால் பூக்கள் என்னவாகும் ..? நொந்து நூலாகும்.. ஆனால் இந்தச் சோலைப் பூக்கள் எல்லாம் சிரித்துக் கொண்டிருக்கின்றன ..ஆனால் மா களிறு அன்ன அழகன் என் மனம் புகுந்ததில் நான்தான் பாடாய்ப்பட்டுப் போனேன் .இப்படி இடித்துரைப்பதால் எனக்கும் அந்தப் பூக்களுக்கும் நடக்கும் சண்டையை நான் எங்கு சென்று முறையிடுவேன் தோழி ?
ஆங்..நான் என்னாண்டு சொல்லுவேன்
ஆரு கிட்ட சொல்லுவேன்..
பொல்லாத காதலும் நில்லாத ஆசையும்
சொல்லாமப் பொத்தி வச்சேன்..
கொல்லாதே என்கணவா
வெல்லாமப் போயிடுமோ வெறும் கனவா..
இந்தப் பூக்களும் தான் கைகொட்டிச் சிரிக்குதே
அது முள்ளா என் மனசத் தைக்குதே
ஊர் சிரிக்கும் நாள் வருமுன்னே
நீ வந்து சேர் என் பெயரின் பின்னே !
எப்பூடி என் கவித ?:)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!