87.பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்
பாடல் : 87
பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே
விளக்கம் :
பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள் - பசுமையான சோலையில் வாழும் குயிலினங்களே , மயில்களே , அழகிய கருவிளை மலர்களே !
வம்பக் களங்கனி காள் வண்ணப் பூவை நறுமலர்காள் - வாசனை மிகுந்த களங் கனிகளே அழகியவண்ணம் கொண்ட நறுமண மலர்களே !
ஐம்பெரும் பாதகர்காள் அணி மால் இருஞ்சோலை நின்ற - ஐம்பெரும் பாதகர்களே திருமாலிருஞ்சோலை நின்ற
எம் பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே - நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு ஏன் ? என்னை வதைப்பதற்கா ?
பசுமை மிக்க சோலையில் வாழும் குயில்களே, மயில்களே, அழகிய கருவிளை (சங்குப்பூ ) மலர்களே ! வாசனை மிக்க களாம் பழங்களே !வண்ணம் கொண்ட நறுமணம் மிக்க காயா மலர்களே !
Add caption |
உங்களுக்கு எதுக்கு எம் பெருமானுடைய நிறம்..? அவர் நிறத்தில் நீங்கள் இருந்து கொண்டு அவன் நினைவை எப்பொழுதும் நினைவூட்டி வதைப்பதற்காகவே இந்நிறம் எடுத்துப் பிறந்தீர்களா.. இப்படிச் செய்ததாலேயே நீங்கள் பாதகர்கள் ஆனீர்கள் போங்கள் !
காதலின் பித்து நிலை ..எப்பக்கம் பார்த்தாலும் அவன் பிம்பமாகத் தெரிவது :) அவன் நிறத்தைக் கொண்டு அவனை நினவூட்டியதால் மிகப் பெரும் பாவியானார்கள் இவர்கள்..
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக எம்பெருமானின் நிறம் என்ற ஒரே காரணத்துக்காகப் பாவியாக்கி விட்டிருக்கிறாள் அவற்றை :)
ஏய்..கோட்டிப் பெண்ணே..!
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!