91.காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்
பாடல் :91காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே
விளக்கம் :
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள் - காலை எழுந்திருந்து கரிச்சான் குஞ்சுக் குருவிக் கூட்டங்கள்
மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் மெய்ம்மை கொலோ - திருமால் வருவார் எனச் சொல்லி மயங்கிப் பாடுவது உண்மையாகவே நடந்து விடுமா ?
சோலை மலைப்பெருமான் துவராபதி எம் பெருமான் - திருமாலிருஞ்சோலை அழகர் மழைப் பெருமான் ,துவாரகை எம் பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே - ஆல் இலையில் துயில் கொள்ளும் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே!
பூ கூட அவன் நிறத்தை நினைவூட்டுவதாகச் சொன்னவளுக்கு, கரிய குருவிகள் சத்தங்கள் மட்டும் வெறும் குருவிச் சத்தமாக் கேட்டுடுமாக்கும்..
இந்தக் கரிச்சான் குஞ்சுக் குருவிக் கூட்டங்கள் எல்லாம் திருமால் வருவார் ன்னு சொல்லி மயங்கிப் பாடுகின்றனவே..இதெல்லாம் உண்மையாகவே நடந்துடுமா..? (இதற்கு முன்பும் தான் பாடின..அப்பவும் தான் நம்பினேன்..அப்ப மட்டும் உண்மையா நடந்துடுச்சா என்ன ? ) திருமாலிருஞ்சோலை மலைப் பெருமான் , துவராகையின் பெருமான், ஆல் இலையில் கண் வளரும் பெருமான் , அவன் வருவான் என்ற , அவனுடைய செய்தியை எனக்குச் சொல்கின்றனவே..
ஓவியம் இளையராஜா |
காத்திருத்தலின் பித்து நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைகிறாள் கோதை .
அவன் வருவதைப் பாடுகிறது என்கிறாள்..அது நடந்துடுமா என்கிறாள்..பின்னர் நடக்கும் அவை தான் வருவார் என்ற வார்த்தை உரைக்கின்றதே என தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள்..
இத்தோட நம் வேதனை தீர்ந்துடும் என நம்புவதும் நடக்காவிடில் இதுவே இறுதி அல்ல எனத் தேறிக் கொள்வதும் ..
வேற வழி.. ?
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!