Friday 28 October 2016

90.இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்

90.இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்

பாடல் :90
இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே

பாடல் : 90
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் - இன்று வந்து இத்தனையையும் சாப்பிட்டு விட்டால்
நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வேன் - நான் ஒன்றுக்கு நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும்  அவனை ஆட்செய்வேன்
தென்றல் மணம் கமழும் திருமால் இருஞ்சோலை தன்னுள் - தென்றல் மணம் கமழும் திருமால் இருஞ்சோலைதன்னிலே
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே - நின்ற பிரான் அடியவளாகிய எனது மனத்திலே வந்து நின்றால் இன்னும் நிறையச் செய்வேன்

மணம் கமழும் தென்றல் வீசும் திருமாலிருஞ்சோலைதனிலே நின்ற பிரான் ,  இன்று வந்து ,அடியவளாகிய எனது மனத்திலேயே வந்து நின்று ,இங்கே   எழுந்தருளி  , இத்தனை (முதல் பாட்டில் நேர்த்திக் கடனாக வைத்த நெய் நிறைந்த அக்கார வடிசிலை ) சாப்பிட்டார் எனில் அவருக்கு ஒன்றுக்கு நூறாயிரமாகக் கொடுத்துப் பின் அவன் உண்ண என்னையும் கொடுப்பேன் என்னையே அவனுடையவளாக்குவேன்
ஓவியம் - இளையராஜா 

எவ்வளவு ஆசை கணவனுக்குச் சமைத்துப் போட ..அதை அவன் உண்டு பார்க்க வேண்டும் கண் நிறைய மனசு நிறைய என்று :) நூறு தடாவுல வெண்ணெய் நூறு தடாவுல (பானையில் ) அக்கார வடிசில் வந்து அவர் சாப்பிட்டாருன்னா இதையே நூறாயிரமா செஞ்சு (அடேங்கப்பா.. ஆயுசு முழுக்கச் சமைச்சுப் போட வாய்ப்புக் கேட்குதுப்பா இந்தப் பொண்ணு ) கொடுப்பேன்..அந்த திருமாலிருஞ்சோலை நம்பி என் மனசுல வந்து அப்படியே தங்கிட்டா போதும்..அவருக்கு என்னையும் உண்ணக் கொடுத்து அவனுக்கே ஆளாவேன்..அவனுடையவள் ஆவேன் :) யார் யார் என்ன என்ன வேண்டுதல் வச்சா இவ எப்படி வைக்கிறா பாருங்க.. :)

அது என்ன மணம் கமழும் தென்றல்.. ?  சோலைகளில் உள்ள பூக்களின் வாசத்தோடு ,   அவள் விருப்பம் கொண்ட மணாளனின் வியர்வை மணத்தையும்  தாங்கி வந்ததாலேயே தென்றல் மணம் வீசியது :)

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!