49.சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
பாடல் :49சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
அவனைநான் செய்வன காணே
விளக்கம் :
சாரங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் - வில்லை வளைத்து இழுக்கும் பலம் பொருந்திய கைகளை உடையவன்
நாங்கள் எம்மில் இருந்து ஒட்டிய கச்சங்கம் - நாங்கள் இருவரும் எங்களுக்குள் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம்
நானும் அவனும் அறிதும் - நானும் அவனும் மட்டுமே அறிவோம்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே ! - இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே செம்மையான (சிவப்பான ) தளிர்களைக் கோதும் சிறிய குயிலே !
திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றி ஆகில் - திருமால் இருக்கும் இடம் சென்று அவரை என்னை விரைந்து வந்து சேரக் கூவுவாய் எனில்
அவனை நான் செய்வன காணே - அவனை நான் என்ன செய்யறேன்னு மட்டும் பாரு !
வில்லை இழுத்து வளைக்கும் பலம் பொருந்திய கைகளை உடையவன் ,அவனும் நானும் எங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் நானும் அவனுமே அறிவோம். அது எங்களது அந்தரங்கம்:) இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே செம்மையான தளிர்களைக் கோதும் சிறிய குயிலே !
என் திருமாலை நான் இருக்கும் இடத்துக்கு விரைந்து வர சீக்கிரம் சென்று நீ சொல்வாய் எனில் ,அவன் வந்த பிறகு நான் அவரை என்னவெல்லாம் செய்யப் போகின்றேன் என்று மட்டும் பார் !
என்னவர், வில்லை சும்மா வளைச்சுப் பிடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா..அப்படி நிற்பார்..அந்தக் கைகள் அவ்வளவு பலம் பொருந்தியவை.... எவரும் இல்லாத் தனிமையில் அப்படி என்ன இரகசியம் பேசினாளோ அப்பேர்ப்பட்ட காதலனோடு.. என்னதான் குயிலைத் தூது செல்லச்சொன்னாலும் அந்தரங்கம் சொல்ல மறுக்கிறாள் இவ்விடத்தில் :) திடீர்னு வெட்கம் வந்துடுச்சு போல :) செந்தளிரைத் தலை கோதுதாம் குயில்.. யாராவது சேட்டை செஞ்சா டேய்..என் கையில நீ சிக்கின என்ன பண்றேன் பாரு உன்ன..என்று மொழிவோம்..அது போலவே அழகாகச் சொல்கிறாள் கோதை :)
என் மச்சானைப் பார்த்தீங்களா..தேங்கனி மாந்தோப்புல ..குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்தா சொல்லு..அவர் வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!