104.தாமுகக்கும் தம்கையில் சங்கமே
பதினோராம் திருமொழி இனிதே ஆரம்பம் :) இந்தத் திருமொழி முழுவதும் திருவரங்கனுக்கே அர்ப்பணம் .பாடல் :104
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே
விளக்கம் :
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ - தாம் விரும்பி தனது கையில் கொண்டுள்ள சங்கு போல் ஆகுமோ
யாம் முகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர் - நான் விரும்பி என் கையில் அணிந்துள்ள சங்குவளை ? சொல்லுங்கள் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்களே !
தீமுகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் - தீ கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைந்து அதன் மேல் படுத்திருக்கும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே - என் முகத்தைப் பார்க்க மாட்டாரோ ? ஆ..அம்மா அம்மா
ஏந்திழையீர் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்
உகந்து - விரும்பி
சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்களே !
தாம் விரும்பி, தமது கையிலே சங்கு வைத்திருக்கிறாரே அவர் அதைப் போலாகுமோ நான் விரும்பி அணிந்திருக்கும் இந்தச் சங்கு வளையல் ?( இன்னமும் குமரி போன்ற கடற்புற மாவட்டங்களுக்குச் சென்றால் சங்கினால் செய்யப்பட ஆபரணங்களைக் காணலாம் )
நானும்தான் சங்கு வளையல் போட்டிருக்கேன்..அந்தச் சங்கை விட்டுட்டு இதைப் பிடிக்கலாமே மாமு :))
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!