107.மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பாடல் :107
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே
விளக்கம் :
மச்சு அணி மாட மதிள் அரங்கர் வாமனனார் - மாடியும் அழகான மாடங்களும் மதில்களும் உடைய திருவரங்கம் அங்கிருக்கும் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீர் ஏற்ற - பச்சை நிறத்துடையவர் தாம் முன்பு நீர் வார்த்து புவி பெற்ற போதிலும்
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல் - பிச்சையில் என்ன குறை மிச்சம் இருந்ததோ என்னுடைய பெய் வளை மீது
இச்சை உடையரேல் இத்தெருவை போதாரே - ஆசை உள்ளவர் போல் இத்தெருவிற்கு வருவாரோ ?
மாடிகளும் அழகுநிறை மாடங்களும் மதில்களும் கொண்ட திருவரங்கத்தின் அரங்கனார் பச்சை நிறத்தவர் , தாம் முன்பு வாமன அவதாரம் எடுத்த பொழுது ஓங்கி உலகம் முழுவதும் அளந்து நீர் பெற்று (மாவலியால் மூவுலகமும் தாரை வார்த்து கொடுக்கப்பட்டது ) புவியைப் பெற்றார் அந்தப் பிச்சையிலும் இன்னும் குறை ஒன்று மிச்சம் இருக்கின்றது போலும் என்னுடைய
பெய்வளை மீது ஆசை கொண்டு அதை அடைய இத்தெருவிற்கு வருவாரோ ?
ஓவியம் -கேசவ் |
அந்த மாவலியை ஏமாற்றி இந்தப் பூவுலகைத் தானமாகப் பெற்றது போல என்னையும் ஏமாற்றி நான் அணிந்திருக்கும் என் கைவளைகளை விரும்பிப் பெற இத்தெருவழியே வருவாரோ ?அப்படியாச்சும் நான் அவரைப் பார்ப்பேனோ ?
கைவளையல்கள் நீ இன்றிப் பிரிவாற்றாமையால்
கழன்று செல்தல் ஆகா
நீ எமை நெருக்கி,அவை உடைந்து போதலே அவற்றின் பிறவிப் பயன் ;-)
Semma feel :)
ReplyDelete